வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் ஏற்கெனவே டெஸ்ட் மற்றும்
ஒருநாள் ஆகிய தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல்
ஆரம்பிக்கிறது. கொல்காத்தாவில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்றைய இந்திய அணியில் கேப்டன்
விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோர் இடம்பெறவில்லை.
இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி, முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் குருனல் பாண்டியா,
உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். புவனேஷ்குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒபேட்
மெக்காய்க்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.