டி20 உலகக் கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங் - தாங்குமா ஜிம்பாப்வே?

டி20 உலகக் கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங் - தாங்குமா ஜிம்பாப்வே?
டி20 உலகக் கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங் - தாங்குமா ஜிம்பாப்வே?
Published on

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மெல்போர்னில் நடைபெறும் சூப்பர் 12 சுற்றின் கடைசிப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. அதேநேரம் தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது.

புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. அதனால் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஒருவேளை தோல்வியடைந்தாலோ அல்லது மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலோ இந்திய அணிக்கு எவ்வித கவலையுமில்லை.

இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்க முடிவு செய்துள்ளது. மறுபுறம், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பாகிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி அரையிறுதி சுற்றுக்குள் அதிரடியாக நுழைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com