தவன், கோலி, பாண்ட்யா, நடராஜன் அசத்தல் : ஆஸி. உடனான டி20 தொடரை வென்றது இந்தியா!

தவன், கோலி, பாண்ட்யா, நடராஜன் அசத்தல் : ஆஸி. உடனான டி20 தொடரை வென்றது இந்தியா!
தவன், கோலி, பாண்ட்யா, நடராஜன் அசத்தல் : ஆஸி. உடனான டி20 தொடரை வென்றது இந்தியா!
Published on

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி  சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பவுலிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியை மேத்யூ வேட் தலைமை தாங்கி வழிநடத்தினார். கேப்டன் மேத்யூ வேடும், ஷார்ட்டும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். வேட் இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கியதோடு அரை சதம் கடந்தார். அவர் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை பயன்படுத்தி ஸ்மித், மேக்ஸ்வெல் மற்றும் ஹென்ரிக்ஸ் மாதிரியான பேட்ஸ்மேன்களும் ரன்களை சேர்த்தனர்.

இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

இந்தியாவுக்காக நடராஜன் 4 ஓவர் வீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தொடர்ந்து அந்த இலக்கை இந்திய அணி விரட்டியது. கே.எல்.ராகுலும், தவனும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ராகுல் 30 ரன்களில் அவுட்டாக கேப்டன் கோலி களம் இறங்கினார். தவனுடன் சேர்ந்து 39 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். தவன் 52 ரன்களில் சாம்பாவிடம் தனது விக்கெட்டை இழந்தார்.

சாம்சன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப க்ரீஸிக்கு வந்த பாண்ட்யா கோலியுடன் கைகோர்த்தார். அவரது இயல்பான கேமை விளையாட இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கோலி 40 ரன்களில் அவுட்டாக கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார் பாண்ட்யா. 22 பந்துகளில் 42 ரன்கள். இதில் இரண்டு சிக்சரும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும். அதில்  கடைசி  ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட நான்கே பந்துகளில் அந்த ரன்களை எடுத்தார் பாண்ட்யா. அவரே ஆட்ட நாயகன் விருதையும் வென்றுள்ளார்.

முடிவில் 19.4 ஓவரில் 195 ரன்களை எடுத்து இந்த அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றதோடு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Hardik Pandya is a monster ?

With his magic bat he sends one high into the stands ?

Scenes ? pic.twitter.com/SOL0wB643Q
— kundan Aryan?? (@realkundan) December 6, 2020

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com