ஆசிய விளையாட்டு போட்டி: வரலாற்றில் முதல்முறை... 100 வது பதக்கத்தை வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் முதன்முறையாக இந்தியா 100ஆவது பதக்கத்தை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி
ஆசிய விளையாட்டு போட்டிசுகுமார் ஷேஷாத்ரி
Published on

ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் முதன்முறையாக இந்தியா 100ஆவது பதக்கத்தை வென்றுள்ளது.

வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர்களான பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வெர்மா மோதினர். முதல் இடம் பிடித்த பிரவீன் ஓஜஸ் தங்கப்பதக்கமும், அபிஷேக் வெர்மா வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டி
ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டி - இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்...!
sreejesh
sreejeshசுகுமார் ஷேஷாத்ரி

வில்வித்தை மகளிர் தனிநபர் பிரிவில் ஜோதி சுரேகா, தென்கெரிய வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜோதி சுரேகா வெல்லும் 3ஆவது தங்கப்பதக்கம் இதுவாகும். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் இந்தோனேஷிய வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி சீன தைபேவை எதிர்கொண்டது. இரு அணிகளும் அதிரடியாக விளையாடி, புள்ளிகளை குவித்தன. இறுதியில் 26க்கு 24 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றது. இதன்மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியா 100ஆவது பதக்கத்தை கைப்பற்றியது.

 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த இந்தியா

ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியா இதற்கு முன் 70 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது. இதனை முறியடித்ததுடன் முதன்முறையாக 100 பதக்கங்களை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது.

25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் இந்தியா 4ஆவது இடத்தில் தொடர்கிறது. ஆசிய விளையாட்டில் இந்தியா 100ஆவது பதக்கத்தை கைப்பற்றியதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com