காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் டி20 ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன்களும், ஷபாலி வர்மா 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 19 ஓவர்களில் இலக்கை கடந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்லீக் கார்ட்னர் 35 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 52 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையும் படிக்க: காமன்வெல்த் போட்டிகள்: டேபிள் டென்னிஸில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி