ஷபாலி வர்மா அதிரடியில் இந்திய மகளிர் அணி வெற்றி
ஷபாலி வர்மாவின் அதிரடி ஆட்டத்தாலும் தீப்தி ஷர்மாவின் அற்புதமான பந்துவீச்சாலும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிப்பெற்றது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 48 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 31 ரன்களும், தீப்தி ஷர்மா 24 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பியூமெண்ட் மட்டும் அரை சதமடித்து 59 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஹீதர் நைட் 30 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பூனம் ஷர்மா 2 விக்கெட்டும், அருந்ததி ரெட்டி, தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.