இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.
இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் இந்தியா - இலங்கை இடையே நடைபெறவுள்ளன. இதில் முதல் டி20 போட்டி இன்று அசாமில் உள்ள கவகாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வருகை தந்திருக்கிறார்.
இந்நிலையில் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்துவீச்சை தேர்வு செய்தது குறித்து பேசிய விராட் கோலி, பந்துவீச்சாளர்களை நம்பி முதலில் பவுலிங்கை தேர்வு செய்ததாகவும், 2020ஆம் ஆண்டில் டி20 போட்டிகளின் மீது அதிக கவனம் செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.