“தோனியின் விக்கெட்டை எடுக்காதவரை, வெற்றி உறுதியில்லை”- நியூஸி. பந்துவீச்சாளர்

“தோனியின் விக்கெட்டை எடுக்காதவரை, வெற்றி உறுதியில்லை”- நியூஸி. பந்துவீச்சாளர்
“தோனியின் விக்கெட்டை எடுக்காதவரை, வெற்றி உறுதியில்லை”- நியூஸி. பந்துவீச்சாளர்
Published on

மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டை எடுக்காத வரை, போட்டியில் வெற்றி பெற முடியாது என்று நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் கூறியுள்ளார். 

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஆனால், 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. விராட் கோலி, தோனி இல்லாத நிலையில், இந்திய அணி 92 ரன்னில் ஆட்டமிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய தோனி, தசைப்பிடிப்பு காரணமாக 3, 4வது போட்டிகளில் விளையாடவில்லை. 4வது போட்டியில் மிடில் ஆர்டரில் தோனி இருந்திருந்தால் இந்திய அணி இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். 

முன்னதாக, ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக தோனி மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தன. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று அரைசதம் அடித்து, தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். நியூசிலாந்து தொடரில் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், 2வது போட்டியில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள போட்டியில் தோனி விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தோனி விளையாட வேண்டும் என்ற கருத்தினை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் கூறுகையில், “அவருடைய சாதனைகள் அவருக்காக பேசும். அவர் மிகவும் அற்புதமான வீரர். உலகக் கோப்பைக்கான அணியில் அவர் இடம்பெற வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து இந்தியா ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. மிடில் ஆர்டரில் அவர் அமைதியாக தன்னுடைய பணியை செய்து வருகிறார். அவருக்கு நீங்கள் பந்து வீசும் போது, அவரை ஆட்டமிழக்க செய்யாமல் போட்டியில் வெற்றி பெற முடியாது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com