179 ரன்களில் சுருண்ட இந்தியா - சொதப்பிய பேட்ஸ்மேன்ஸ்
நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய 179 ரன்களில் சுருண்டது.
உலகக் கோப்பை தொடரின் 4வது பயிற்சிப் போட்டி நியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே லண்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா 2 (6) மற்றும் ஷிகர் தவான் 2 (7) ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினர். பின்னர் வந்த கேப்டன் கோலியும் 18 (24) ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, இதற்கிடையே வந்த கே.எல்.ராகுல் 6 (10) ரன்களில் நடையை கட்டினார்.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யா சற்று நேரம் நிலைத்து ஆடினர். பின்னர் 17 (42) விக்கெட்டை இழந்து தோனியும் ஏமாற்றம் அளித்தார். அதைத்தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 4 (3) ரன்களில் அவுட் ஆகி சொதப்ப, ஹர்திக் பாண்ட்யாவும் 30 (37) விக்கெட்டை இழந்தார்.
இதன்பின்னர் வந்த ஜடேஜா இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக விளையாடி 50 பந்துகளில் 54 ரன்களை எடுத்து அசத்தினார். அவரும் அவுட்டாகிய பின்னர் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தன்னால் முடிந்த வரை அடித்து 19 (36) ரன்களை எடுத்தார். 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா 179 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்போது நியூஸிலாந்து அணி 9.2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் குவித்துள்ளது.