இந்தியா Vs இங்கிலாந்து கடைசி டெஸ்ட்: எப்படி இருக்கும் அணிகள்?

இந்தியா Vs இங்கிலாந்து கடைசி டெஸ்ட்: எப்படி இருக்கும் அணிகள்?
இந்தியா Vs இங்கிலாந்து கடைசி டெஸ்ட்: எப்படி இருக்கும் அணிகள்?
Published on

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க இருக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டி இரண்டே நாள்களில் முடிவடைந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. ஆனால் அகமதாபாத் பிட்ச் மிக மோசமாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இதே அகமதாபாத் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் வேட்கையில் உள்ள இந்திய அணிக்கு இன்னொரு வகையிலும் இந்த டெஸ்ட் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. லண்டனில் ஜூன் மாதம் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது டிராவாவது காண வேண்டும். அப்போது தான் இறுதி சுற்றில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு வேளை இந்திய அணி இந்த போட்டியில் தோற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறி விடும்.

இன்றையப் போட்டிக்கான உத்தேச அணி விவரம்:

இந்தியா

சுப்மன் கில்
ரோகித் சர்மா
புஜாரா
கோலி
ரஹானே
ரிஷப் பன்ட்
வாஷிங்டன் சுந்தர்
அஸ்வின்
அக்ஸர் படேல்
இஷாந்த் சர்மா
முகமது சிராஜ்

இங்கிலாந்து

ஜாக் கிராவ்லி
டாம் சிப்லி
ஜானி பேர்ஸ்டோ
ஜோ ரூட்
பென் ஸ்டோக்ஸ்
ஆலி போப்
பென் போக்ஸ்
ஜோப்ரா ஆர்ச்சர்
ஜாக் லீச்
டாம் பெஸ்
ஜேம்ஸ் ஆண்டர்சன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com