இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினாலும் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் ரோகித். தொடர்ச்சியாக நடப்பு டி20 தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனங்களுக்கு உள்ளான கே.எல்.ராகுல் இந்தப் போட்டியிலும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதுவும் 17 பந்துகளை சந்தித்து 14 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தார்.
ரோகித் ஆட்டமிழந்த பிறகு களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ், முதல் பந்திலே சிக்ஸர் பறக்கவிட்டார். சூர்யகுமார் ஒருபுறம் அதிரடி காட்ட, கேப்டன் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் தன் பங்கிற்கு நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 28 பந்துகளில் அரைசதம் விளாசிய சூர்யகுமார் 57 ரன்கள் எடுத்த நிலையில் தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடித்து இருந்தார்.
ரிஷப் 30 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஸ்ரேயாஸ் பொறுப்புடன் விளையாடி 18 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. ஷர்துல் தாகூர் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட் வீழ்த்தினார். 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

#TeamIndia post 1⃣8⃣5⃣/8⃣ on the board in the 4th @Paytm #INDvENG T20I! @surya_14kumar 5⃣7⃣@ShreyasIyer15 3⃣7⃣

The England chase shall commence soon.

Scorecard ? https://t.co/TYCBHIV89r pic.twitter.com/8tO0GRg902
— BCCI (@BCCI) March 18, 2021