“நீல நிற ஜெர்ஸிதான் மிகவும் பெருமை” - விராட் கோலி நெகிழ்ச்சி

“நீல நிற ஜெர்ஸிதான் மிகவும் பெருமை” - விராட் கோலி நெகிழ்ச்சி
“நீல நிற ஜெர்ஸிதான் மிகவும் பெருமை” - விராட் கோலி நெகிழ்ச்சி
Published on

இந்திய அணியின் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அறிமுகம் செய்த கேப்டன் விராட் கோலி, நீல நிறம்தான் எப்பொழுதும் நம்முடைய வண்ணம் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாளைய போட்டி குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது இந்திய அணியின் ஆரஞ்சு நிற ஜெர்ஸி குறித்து பேசிய விராட்  கோலி, “இது எனக்குப் பிடித்திருக்கிறது. இதன் வண்ணம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஒருநாள் போட்டிக்கு மட்டுமான இந்தச் சிறப்பான மாற்றம். 

ஆனால், இந்த ஜெர்ஸியே நிரந்தரமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. நீல நிறம்தான் எப்பொழுதும் நம்முடைய நிறம். அதனை அணிந்து கொள்வது மிகவும் பெருமையாக இருக்கும். உலகக் கோப்பை தொடரைப் பொறுத்தவரையில் இது ஒரு ஸ்மார்ட் கிட்” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்திய வீரர்கள் ஆரஞ்சு நிற புது ஜெர்ஸியை அணிந்து கொண்டுதான் விளையாடவுள்ளனர். ஒரே நிற ஜெர்ஸியை கொண்ட இருஅணிகள் ஒரே நேரத்தில் மோதும் போது ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க ஐசிசி இந்த புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. இருப்பினும், இந்த ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அணிந்தால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போல் வீரர்கள் இருக்கிறார்கள் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com