இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடந்த டெஸ்ட் போட்டியின் போது ரூ.75 லட்சத்தை உணவிற்காக செலவிட்டதாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் பிப்ரவரி மாதம் நடைப்பெற்றது. அந்த போட்டியை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அம்மாநில கிரிக்கெட் சங்கம் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரூ.75 லட்சத்திற்கான சாப்பாட்டு ரசீதும் அடங்கும்.
உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி இந்தியா-வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டியின் பார்வையாளராக ரத்னாகர் ஷெட்டி நியமிக்கப்பட்டார். இவர் அந்த போட்டியின் அறிக்கையை, நீதிபதிகள் ரமேஷ் ரங்கநாதன் மற்றும் ஷமீம் அக்தர் அடங்கிய அமர்வின் முன் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், ரூ.75 லட்சத்திற்கான சாப்பாட்டு ரசீதில் 2000 காவல்துறையினர், கிரிக்கெட் சங்க அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச உணவு அடங்கும் என கூறப்பட்டுள்ளது.