இன்று, முதல் டி-20: இந்தியாவை வென்று சாதனைக்கு ஏங்கும் பங்களாதேஷ்!

இன்று, முதல் டி-20: இந்தியாவை வென்று சாதனைக்கு ஏங்கும் பங்களாதேஷ்!
இன்று, முதல் டி-20: இந்தியாவை வென்று சாதனைக்கு ஏங்கும் பங்களாதேஷ்!
Published on

இந்தியா -பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.

இந்தியா வந்துள்ள பங்களாதேஷ் அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டி20 போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை காரணமாக பங்களாதேஷ் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. மேலும், இந்திய கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார். ‘இளம் வீரர்கள் தங்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று ரோகித் சர்மா கூறியிருப்பதால் இன்றைய போட்டியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.

விராத் கோலி இல்லாததால் அவர் இடத்தில் கே.எல்.ராகுல் அல்லது சஞ்சு சாம்சன் இறக்கப்படலாம். ஹர்திக் பாண்டியா இடத்தில் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே விளையாட வாய்ப்பிருக்கிறது.

பங்களாதேஷ் அணி, இந்தியாவுடன் 8 டி-20 போட்டியில் மோதி இருக்கிறது. இதில் ஒன்றில் கூட பங்களாதேஷ் வென்றதில்லை. இதனால் இன்றைய போட்டியில் வென்று வரலாறு படைக்க அந்த அணி ஏங்குகிறது.

அந்த அணியின் கேப்டன் மக்முதுல்லா, சவுமியா சர்கார், அனுபவ வீரர்ர் முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ், வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜூர் ரகுமான் ஆகியோர் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். இவர்களை சமாளித்து விட்டால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும்.

இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதனிடையே டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com