பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்கிறது.
உலகக் கோப்பையின் 10வது பயிற்சிப் போட்டி இன்று இந்தியா மற்றும் பங்களதேஷ் இடையே நடைபெறுகிறது. வேல்ஸ் நாட்டில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் இந்திய அணி முதல் பேட்டிங் செய்யவுள்ளது. மைதானம் ஈரப்பதத்துடன் இருப்பதால் போட்டி தொடங்குவதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் 10 நிமிடங்களில் போட்டி தொடங்கியது.
இந்திய அணி கடந்த போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. ஜடேஜா அரை சதம் அடித்திருந்தார். மற்ற அனைத்து வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியிருந்தனர். இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி பேட்டிங் திறனை வெளிப்படுத்தும் வகையில் விளையாட திட்டமிட்டுள்ளது. அதேசமயம் பங்களாதேஷ் அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவிருந்த 6வது பயிற்சிப் போட்டி மழையால் ரத்தானது. இதனால் அந்த அணி தங்கள் முதல் வெற்றியை இந்தியாவிற்கு எதிராக பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.