“கோலி களத்தில் வேற லெவலில் இருக்கிறார்” - புகழும் பிராட் ஹாக்

“கோலி களத்தில் வேற லெவலில் இருக்கிறார்” - புகழும் பிராட் ஹாக்
“கோலி களத்தில் வேற லெவலில் இருக்கிறார்” - புகழும் பிராட் ஹாக்
Published on

இந்திய அணியின் மிகப்பெரிய ஆற்றலாக கேப்டன் விராட் கோலி திகழ்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்து, பல சாதனைகளை படைத்து வருகிறார். இருப்பினும், அவ்வப்போது சர்ச்சையில் சிக்க தவறவில்லை. குறிப்பாக அவரது கோபம் தான் அவருக்கு முதல் எதிரியாக உள்ளது. தன்னுடைய ஆக்ரோஷம் மற்றும் கோபத்தால் விராட் கோலி சர்ச்சைக்குள்ளாவது ஆஸ்திரேலிய தொடர் வரை தொடர்ந்து வருகிறது. பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் பெய்னேவுக்கும், விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால், விராட் கோலிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன் வைத்தனர். பல்வேறு விருதுகளை பெற்ற பாலிவுட் நடிகர் நஸிருதீன் கூட கோலியின் பண்பினை சாடியிருந்தார்.

விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிராட் ஹாக் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். “விராட் கோலி இந்திய அணியின் உந்து சக்தியாக, ஆற்றலாக உள்ளார். முழுமையான கேப்டனாக களத்தில் செயல்படுகிறார். போட்டியின் போது ஆடுகளத்தில் அவரை பாருங்கள். அவரது உற்சாகத்தின், ஆற்றலின் அளவும் தீவிரமாக இருக்கும். அவர் தன்னைப் போலவே மற்ற வீரர்களிடமும் அதே அளவு எனர்ஜி இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பார். பேட்டிங்கை பொறுத்தவரையும் விராட் கோலி வேற லெவலில் இருக்கிறார். யாருடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு அவரது பேட்டிங் திறமை உள்ளது” என்று ஹாக் கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணிக்காக வெற்றி வாய்ப்பு குறித்து கூறுகையில், “இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களது ஆக்ரோசமான பந்துவீச்சினால் இந்திய அணி முதல் டெஸ்டில் வென்றது. தற்போது உள்ள ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்திய அணிக்கு நல்ல வாய்ப்புள்ளது. அஸ்வின் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், ஜடேஜா அல்லது குல்தீபை பயன்படுத்தலாம். குல்தீப் பந்து ஆடுகளத்தில் நன்றாக ஸ்பின் ஆகிறது. நாதன் லையன் பந்து கூட அவ்வளவு அதிகமாக ஸ்பின் ஆவதில்லை” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com