ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - ரிஷப் பண்ட் விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - ரிஷப் பண்ட் விலகல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - ரிஷப் பண்ட் விலகல்
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. இந்தப் பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகின்றன. முதல் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரிஷப் பண்ட், 33 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதற்கிடையே அவர் பேட்டிங் செய்யும் போது, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் வீசிய பந்து பண்ட்-ன் ஹெல்மெட்டில் அடித்தது. இதனால் அவர் லேசான காயம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும் போது, ரிஷப் பண்ட் கீப்பிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கீப்பிங் செய்தார். ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மூளையில் அதிர்வு ஏற்பட்டிருப்பதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு பிறகு, அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பாரா ? அல்லது மாட்டாரா ? என்பது அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரிஷப் பண்ட் விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மணிஷ் பாண்டே அல்லது கேதர் ஜாதவ் இருவரில் ஒருவருக்கு ஆடு லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com