ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 352 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 14வது லீக் போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வருகிறது. லண்டன்
கென்னிங்டான் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை
தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான்
பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 (70) ரன்களில் ரோகித் ஷர்மா விக்கெட்டை இழந்தார்.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி மற்றும் ஷிகர் தவான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதம் அடித்து அசத்திய தவான்,
117 (109) ரன்களில் அவுட் ஆகினார். அதையடுத்து வந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆரம்பம் முதலே அதிரடியை
வெளிப்படுத்தினார். மறுபுறம் கோலி அடித்து விளையாட ஆரம்பித்தார்.
பந்துகளை பந்தாடிய ஹர்திக் 48 (27) ரன்களில் விக்கெட்டைபறிகொடுத்து அரை சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் களமிறங்கிய தோனி கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும்பவுண்டரிகளை விளாசினர். கடைசி ஓவரில் தோனி 27 (14) ரன்களில் தோனி ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கோலியும் 82 (77) ரன்களில் விக்கெட்டை இழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 352 ரன்கள் குவித்தது.