டி 20 போட்டியில் சாதனைப் படைக்க இருக்கும் பும்ரா!

டி 20 போட்டியில் சாதனைப் படைக்க இருக்கும் பும்ரா!
டி 20 போட்டியில் சாதனைப் படைக்க இருக்கும் பும்ரா!
Published on

இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் டி 20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சாதனைப் படைக்க உள்ளார். 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்திலுள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. இறுதிவரை விளையாடிய தோனி 37 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே குவித்தார். 

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 2 விக்கெட்டுகளுக்குப் பிறகு வந்த மேக்ஸ்வெல் அதிரடியை வெளிப்படுத்தி ஆட்டத்தை மாற்றினார். 43 பந்துகளில் அவர் 56 ரன்களை எடுத்து அவுட் ஆகினார். தொடக்க ஆட்டக்காரரான ஆர்ஸி ஷார்ட் 37 (37) ரன்கள் எடுத்தார். கடைசி மூன்று ஓவர்களில் ஆட்டம் த்ரில் ஆனது. 

இறுதியில் இரண்டு ஓவர்களுக்கு 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு ஆஸ்திரேலியா வந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அப்போது 19 வது ஓவரில் பந்து வீசிய பும்ரா, அபார திறமையை வெளிப்படுத்தினார். 2 ரன்களை மட்டுமே கொடுத்து முக்கிய விக்கெட்டான, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் விக்கெட்டை அவர் எடுத்தார். 

மேலும், அந்த ஓவரின் கடைசி பந்தில் அவர் மற்றொரு விக்கெட்டையும் சாய்த்தார். இதனால் அரங்கமே அதிர்ந்தது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 3 விக்கெட்டுகளை சாய்த்தார் பும்ரா. ஹேண்ட்ஸ்கோம்ப் விக்கெட்டை வீழ்த்தியபோது, சர்வதேச டி-20 போட்டியில் பும்ரா 50 விக்கெட்டுகள் என்ற இலக்கை எட்டினார். அத்துடன், டி-20 அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் 51 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தை அவர் பிடித்தார். முதலிடத்தில் 46 டி 20 போட்டியில் விளையாடி 52 விக்கெட்டுகளுடன் ரவிசந்திரன் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் டி 20 போட்டியில் பும்ரா முதலிடத்தை பிடித்து சாதனைப் படைக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com