‘173 ரன் இலக்கு’ - பாகிஸ்தானை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழையுமா இந்தியா?

‘173 ரன் இலக்கு’ - பாகிஸ்தானை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழையுமா இந்தியா?
‘173 ரன் இலக்கு’ - பாகிஸ்தானை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழையுமா இந்தியா?
Published on

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்று வரும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி, முகமது ஹுரைரா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணி தொடக்கத்திலே இரண்டு விக்கெட்களை வீழ்த்தியது. ஹுரைரா 4, ஃபகத் முனிர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஹைதர் அலியுடன், ரோஹைல் நஸிர் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

ஹைதர் அலி 56 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணியின் சரிவு தொடங்கியது. மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த நஸிர் 62 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். முகமது ஹரிஸ் மட்டும் 21 ரன்கள் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 43.1 ஓவரில் பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் மிஸ்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். கார்திக் தியாகி, ரவி பிஸ்னோய் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர்.

173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com