இந்திய தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்திய 4-ஆவது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. செப்டம்பர் 11-ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி செப்டம்பர் 13-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூடான், நேபால், வங்கதேசம், மாலத்தீவு என 7 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களுடைய திறமையை நிரூபித்தனர்.
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்போட்டி, ஈட்டி எறிதல், பட்டியறிதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட வகையான போட்டிகள் ஆண் பெண்களுக்கு தனித்தனியே நடத்தப்பட்டன. மொத்தமாக 28 வகையான விளையாட்டுகளில் 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியாவில் இருந்து மட்டும் 62 வீரர்கள் பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 9 பேர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். இந்திய தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்திய 4-ஆவது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. செப்டம்பர் 11-ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி செப்டம்பர் 13-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூடான், நேபால், வங்கதேசம், மாலத்தீவு என 7 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களுடைய திறமையை நிரூபித்தனர்.
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்போட்டி, ஈட்டி எறிதல், பட்டியறிதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட வகையான போட்டிகள் ஆண் பெண்களுக்கு தனித்தனியே நடத்தப்பட்டன. மொத்தமாக 28 வகையான விளையாட்டுகளில் 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியாவில் இருந்து மட்டும் 62 வீரர்கள் பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 9 பேர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
3 நாட்கள் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் இந்தியா பதக்கங்களை அள்ளி குவித்தது. 21 தங்கம் 22 வெள்ளி 5 வெண்கல பதக்கங்கள் உட்பட 48 பதக்கங்களை தன்வாசப் படுத்தியது.
இந்தியா சார்பில் போட்டியில் பங்கேற்ற துடிப்பு மிக்க வீரர் வீராங்கனைகள் ஒவ்வொருவரும் மிகுந்த உற்சாகத்தோடு திறமைகளை வெளிப்படுத்தினர்.
முதல் நாளில் இருந்தே இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில், இறுதி நாளிலும் அதிக பதக்கங்களை கைப்பற்றியது. மொத்தமாக இந்தியா 48 பதக்கங்களோடு முதலிடத்தை பிடித்ததுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. முதல் இடத்தைப் பிடித்த இந்திய அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது.
35 பதக்கங்களை பெற்ற இலங்கை இரண்டாவது இடத்தையும், மூன்று பதக்கங்களை பெற்ற வங்கதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா மட்டும் 2 தங்க பதக்கங்களை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தமிழக வீரர்கள் மொத்தமாக 9 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் 5 தங்கம், 2 வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்:
அபிநயா - 2 தங்கம் (100மீ, 100மீ தொடர் ஓட்டம்)
கனிக்ஷா டீனா - 1 தங்கம் (400மீ)
பிரதிக்ஷா - 1 தங்கம் (நீளம் தாண்டுதல்)
ஜிதின் - 1 தங்கம் (நீளம் தாண்டுதல்).
லக்ஷன்யா - 1 வெள்ளி (நீளம் தாண்டுதல்)
கார்த்திகேயன் - 1 வெள்ளி (100மீ தொடர் ஓட்டம்)