21ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை சைகோம் மீராபாய் சானு தங்க பதக்கம் வென்றார்.
21ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்ட் மாகாணத்தின் கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 11 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டிகளில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 4500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 227 பேர் கொண்ட இந்திய அணியில் ஒரு வெள்ளி பதக்கத்துடன் பதக்கப்பட்டியலை திறந்து வைத்தார் பி குருராஜா.
இதனையடுத்து பளுத்தூக்குதல் போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சைகோம் மீராபாய் சானு தங்க பதக்க வென்றார். இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றதன் மூலம், 6 புதிய சாதனைகளை படைத்து மீராபாய் சானு சாதனைபடைத்துள்ளர்.
தங்க பதக்கத்தை பெற்றதையடுத்து “நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், இதை சாதிக்க நான் மிகவும் கடினமாக உழைத்தேன், இது ஒரு நல்ல உணர்வு என்று மட்டுமே சொல்ல முடியும். இது எனது இரண்டாவது காமன்வெல்த் பதக்கம் ஆகும், நான் பழைய சாதனையை உடைக்க விரும்பவில்லை. ஆனால் நான் இங்கு வந்தபோது அவற்றை உடைக்க விரும்பினேன். அடுத்த இலக்காக ஆகஸ்டில் நடக்கும் ஆசிய போட்டிகளில் நன்றாக விளையட விரும்புகிறேன். அது மிகவும் கடினமானதாக இருக்கும், அதற்காக நான் மிகக் கடினமாக உழைக்க வேண்டும்,நான் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியிருக்கும்” என்றார்.
இந்தப்போட்டிகளில் மொரிஷியஸ்யின் மேரி ஹனிட்ரா ரோல்யா ரானையோசோ வெள்ளி பதக்கத்தையும் இலங்கையின் தின்ஷா கோம்ஸ் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.