டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தீவிரமாக தயாராகும் இந்தியா !

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தீவிரமாக தயாராகும் இந்தியா !
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தீவிரமாக தயாராகும் இந்தியா !
Published on

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற நிலைக்குழு கலந்தாலோசனை நடந்தியுள்ளது

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஓலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியாவின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக ஐந்து முன்னணி ஒலிம்பிக் போட்டி பிரிவுகளின் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் (என்.எஸ்.எஃப்), மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுடன் கலந்தாலோசனை நடத்தியது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இனிமேல் ஒலிம்பிக் விளையாட்டுக்கான இந்தியாவின் தயாரிப்புகளை கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் "பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள்" பற்றி மதிப்பீடு செய்ய வரும் மாதங்களில் பல கூட்டங்களை நடத்த இந்த குழு திட்டமிட்டுள்ளது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பில் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு , ஹாக்கி இந்தியா , இந்திய மல்யுத்த கூட்டமைப்பு , இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு  மற்றும் இந்திய தேசிய துப்பாக்கி சங்கம் ஆகியவை அடங்கும். விளையாட்டுத்துறை செயலாளர் ரவி மிட்டல், இந்திய விளையாட்டு ஆணையத்தின்(எஸ்ஏஐ) இயக்குநர் ஜெனரல் சந்தீப் பிரதான் மற்றும் பிற மூத்த எஸ்ஏஐ அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த பாராளுமன்றக் குழுவின் தலைவராக ஆளும் பாஜகவின் மாநிலங்களவை எம்.பி வினய் பி.சஹஸ்ரபுத்தே உள்ளார். மேலும் புவனேஸ்வர் கலிதா, ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அரவிந்த்குமார் சர்மா போன்ற அனுபவமுள்ள அரசியல்வாதிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 டோக்கியோ விளையாட்டுக்களுக்கான நாட்டின் தயார்நிலை, நடந்துகொண்டிருக்கும் தேசிய முகாம்கள், விளையாட்டு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது, கோவிட் -19 பாதுகாப்புடன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் விளையாட்டுகளில் இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் பதங்கங்களின் அளவு குறித்து அமைச்சகம் மற்றும் எஸ்ஏஐ அதிகாரிகளுடன் குழு விவாதித்ததாக விளையாட்டுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மிக முக்கியமாக, பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள துறைகள் அடையாளம் காணப்பட்டன மேலும் இந்த ஒலிம்பிக் போட்டியில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பதக்கங்களை எதிர்பார்க்கப்படுகிறது என்று அறியப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com