புதிய சாதனை படைத்த இந்தியா - நியூசி. அரையிறுதிப் போட்டி

புதிய சாதனை படைத்த இந்தியா - நியூசி. அரையிறுதிப் போட்டி
புதிய சாதனை படைத்த இந்தியா - நியூசி. அரையிறுதிப் போட்டி
Published on

இந்தியா, நியூசிலாந்து இடையே நடந்த அரையிறுதி கிரிக்கெட் போட்டி, அதிகம் பேர் கண்டுகளித்த போட்டியாக, புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன் னேறின. முதலாவது அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.

இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டி, அதிகம் பேர் கண்டுகளித்தப் போட்டியாக சாதனை படைத்துள்ளது.

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளத்தில் இப்போட்டியை கண்டுகளித்தவர்கள் குறித்த தகவல்களை ஐசிசி வெளியிட்டது. அதில் ஹாட் ஸ்டார் செயலி மூலம், இந்தப் போட்டியை 2.53 கோடி பேர் கண்டு ரசித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற் கு முன் 1.86 கோடி பேர் ரசித்ததே சாதனையாக இருந்து வந்துள்ளது.

இதே போல், இங்கிலாந்து- இந்தியா மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போட்டிகளை 4 லட்சத்து 65 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளனர். இங்கிலாந்து- ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான அரையிறுதி போட்டி, அதிகம் பேர் கண்டுகளித்த வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com