மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை லீட் எடுத்துள்ளது இந்திய அணி.
முதல் நாள் ஆட்டத்தில் 72.3 ஓவர்களுக்கு 195 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எஞ்சியிருந்த 11 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை குவித்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்தியாவுக்காக கில்லும், புஜாராவும் தொடங்கினர். கில் 45 ரன்களிலும், புஜாரா 17 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் கேப்டன் ரஹானே, ஹனுமா விஹாரியுடன் 52 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். விஹாரி 21 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த பண்டுடன் 57 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரஹானே. பண்ட் 29 ரன்களில் அவுட்டாகிய நிலையில் களத்தில் நிதானமாக கேப்டன்சி பிளே ஆடி வருகிறார் ரஹானே.
111 பந்துகளில் அரை சதம் கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார் ரஹானே. 65.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை கடந்தது இந்தியா. அதன் மூலம் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி லீட் எடுத்துள்ளது. இடையில் மழை குறுக்கிட்ட போதும் அசராமல் விளையாடி வருகிறது இந்தியா.