ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள லக்சயா சென், காலிறுதியில் சீனாவின் லு குவாங் ஷு-வை எதிர்த்து விளையாட இருந்தார். தரவரிசையில் 27ஆவது இடத்தில் உள்ள சீன வீரர் போட்டியில் இருந்து விலகியதால், லக்சயா சென் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிரகாஷ் படுகோன், புல்லேலா கோபிசந்திற்கு பிறகு இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை லக்சயா சென் பெற்றுள்ளார்.
பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் - ட்ரீசா ஜாலி இணை அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. உலக தரவரிடசயில் 46ஆவது இடத்தில் உள்ள இந்திய இணை, உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த ஜோடியை அதிர்ச்சி தோல்வியடைய வைத்தது. எனினும் ஆண்கள் காலிறுதியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை தோல்வியடைந்தது
இதையும் படிக்க: சைக்கிள் ஓட்டியபடி ரூபிக் கியூபை 14.32 நொடிகளில் வரிசைப்படுத்திய சென்னை சிறுவன்!