'ரிஷப்பை மட்டும் ஏன் ஓபனிங் விளையாட விடமாட்ரீங்க' - டிராவிட் மீது கைஃப் காட்டம்

'ரிஷப்பை மட்டும் ஏன் ஓபனிங் விளையாட விடமாட்ரீங்க' - டிராவிட் மீது கைஃப் காட்டம்
'ரிஷப்பை மட்டும் ஏன் ஓபனிங் விளையாட விடமாட்ரீங்க' - டிராவிட் மீது கைஃப் காட்டம்
Published on

ரிஷப் பண்ட்டை டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், முன்னாள் வீரர் முகம்மது கைஃபும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய கிரிக்கெட் அணி படு தீவிரமாக தயாராகி வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்களை ஏற்கனவே யோசித்து வைத்துள்ள தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும், தொடர்ச்சியாக அவர்களை பயன்படுத்தி சரியான ப்ளேயிங் 11-ஐ உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக இந்த ஆண்டில் பல பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டன. குறிப்பாக இந்திய அணியின் பெரிய பலவீனமாக உள்ள ஓபனிங் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. கடந்த சில மாதங்களாகவே இந்திய அணியின் ஓபனிங் வரிசையை பூர்த்தி செய்ய ரோகித் சர்மா உட்பட 7 வீரர்கள் அந்த வரிசையில் இறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்கள். நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் ரோகித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் தொடக்க பேட்ஸ்மேனாக இறக்கப்பட்டார்.

இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவின் இந்த பரிசோதனை முயற்சிகளை விமர்சித்துள்ள முன்னாள் வீரர் முகம்மது கைஃப், இந்திய அணி இன்னும் சில போட்டிகளில் ரிஷப் பண்டுக்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள முகம்மது கைஃப், இந்திய அணி இன்னும் 2-3 போட்டிகளுக்கு ரிஷப் பண்ட்-ஐ தொடக்க வீரராக இறங்க வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவருக்கு குறைந்தது 5 வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் பொதுவாக வீரர்களுக்கு 5 முதல் 6 போட்டிகள் வரை வாய்ப்பு கொடுத்து ஆதரிக்கின்றனர். ஆனால் ரிஷப் பண்ட் விஷயத்தில் இது நடக்கவில்லை. சூர்யகுமார் யாதவை மிடில் ஆர்டர் அல்லது பினிஷிங் ஆர்டரில் இறக்கினால் கூட சரியானதாக இருக்கும். விராட் கோலி, கேஎல் ராகுல் இருவரும் அணிக்கு திரும்பும்போது  சூர்யகுமார் யாதவ் 4வது பேட்டராக இருப்பார். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. மேலும் இதனிடையே இஷான் கிஷனும் காத்திருக்கிறார்” என்றார்.

நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் முதல்முறையாக ஓபனிங் பேட்ஸ்மேனாக இறக்கப்பட்ட, சூர்ய குமார் யாதவ் 16 பந்துகளில் 24 ரன்கள் அடித்தார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். அதேபோல் அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான இரு டி20 போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரிஷப் பண்ட் முறையே 26 ரன்கள் மற்றும் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

இதையும் படிக்க: 'சார்' என்றுதான் அழைக்க வேண்டும் -சச்சினை வம்பிழுத்து வாங்கி கட்டிக்கொண்ட ஆஸ்திரேலிய வீரர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com