29 பதக்கங்கள் பெற்று 18 ஆவது இடத்தை பிடித்த இந்தியா! பாராலிம்பிக் போட்டியில் சாதனை!

பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த பாராலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா வாணவேடிக்கைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
பாராலிம்பிக்
பாராலிம்பிக் முகநூல்
Published on

பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த பாராலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா வாணவேடிக்கைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி பாராலிம்பிக் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அனைத்து போட்டிகளும் நிறைவடைந்த நிலையில், நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், பாராலிம்பிக் தீபம், அடுத்து 2028 ஆம் ஆண்டு பாராலிம்பிக் நடைபெற உள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டு கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக வண்ணமயமான வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தேசியக் கொடி ஏந்தி தங்களது நன்றியை தெரிவித்தனர். அதன்படி, இந்தியாவின் வில்வித்தை வீரர் ஹவிந்தர் மற்றும் தடகள வீராங்கனை ப்ரீத்தி ஆகியோர் இந்திய தேசியக் கொடியை ஏந்தி மைதானத்திற்கு வந்தனர்.

அதேபோல் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இவ்விழாவில், ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.

பாராலிம்பிக்
பாராலிம்பிக் ஈட்டி எறிதல்: வெள்ளி டூ தங்கம்... இந்திய வீரருக்கு அடித்த ஜாக்பாட்..!

இந்நிலையில், பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 29 பதக்கங்களை வென்றுள்ள இந்திய குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ”பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டார்.

நமது சிறந்த பாரா விளையாட்டு வீரர்கள் 29 பதக்கங்களை வென்றுள்ளது, இந்திய மக்களை மகிழ்ச்சியில் திளைக்கவைத்துள்ளது. பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய குழுவினரின் சிறந்த ஆட்டம் வெளிப்பட்டுள்ளது. அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாகவே நமது வீரர்கள் இதை சாதித்துக் காண்பித்துள்ளனர். நமது வீரர்களின் சிறந்த ஆட்டம், இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com