Asian Champions Trophy | பாகிஸ்தானை வீழ்த்தி முதல்முறையாக பைனல் சென்ற சீனா! கெத்தாக நுழைந்த இந்தியா!

2024-ம் ஆண்டுக்கான ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது நடப்பு சாம்பியனான இந்தியா.
இந்தியா ஹாக்கி அணி
இந்தியா ஹாக்கி அணிx
Published on

8-வது ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிரோபியானது சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறைமோதிய நிலையில், லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

இந்தியா ஹாக்கி அணி
இந்தியா ஹாக்கி அணி

இந்நிலையில், நடப்பு சாம்பியனான இந்தியா லீக் சுற்றுப்போட்டிகளில் மோதிய 5 ஆட்டங்களிலும் “சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா, பாகிஸ்தான்” முதலிய 5 அணிகளையும் வீழ்த்தி தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

அரையிறுதிப்போட்டிகளில் பாகிஸ்தான் டிரோபியை நடத்தும் சீனாவுடனும், நடப்பு சாம்பியனான இந்தியா தென் கொரியாவுடனும் பலப்பரீட்சை நடத்தின.

இந்தியா ஹாக்கி அணி
கடைசி நாள்.. இறுதி 3 நிமிடம்.. வெற்றிக்கு 1விக். தேவை.. பேட்ஸ்மேனை சூழ்ந்த 11வீரர்கள்! த்ரில் போட்டி

கொரியாவை 4-1 என வீழ்த்தி பைனல் சென்ற இந்தியா!

இன்று நடைபெற்ற 2024 ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிரோபி அரையிறுதிப்போட்டியில் தென் கொரியா மற்றும் இந்தியா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் தங்களுடைய ஃபார்மை தொடர்ந்து சிறப்பாக வெளிப்படுத்திவரும் இந்திய அணி முதல் பாதியிலேயே 3 கோல்களை அடித்து 3-0 என வலுவாக அடித்தளம் போட்டது. முதல்கோலை உத்தம் சிங் அடித்த நிலையில், இரண்டாவது கோலை கேப்டன் ஹர்மன்ப்ரீத் அடித்து அசத்தினார்.

இரண்டாம் பாதியில் கொரியா 1 கோலை அடித்தாலும், முடிவில் 4-1 என வெற்றிபெற்ற இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.

இந்தியா ஹாக்கி அணி
அடேங்கப்பா.. வருசத்துக்கு இத்தனை கோடியா? Cricket கமெண்ட்ரி செய்பவரின் ஒருநாள் சம்பளம் என்ன தெரியுமா?

பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த சீனா..

மற்றொரு அரையிறுதிப்போட்டியில் மோதிய சீனா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மிகப்பெரிய த்ரில்லர் போட்டியாக மாற்றின. சீனா அணி முதல்முறையாக ஹாக்கி தொடரின் அரையிறுதிப்போட்டியில், அதுவும் சொந்த மக்களுக்கு எதிராக பங்கேற்றது.

இரண்டு அணிகளும் மிகப்பெரிய யுத்தத்தை களத்தில் வெளிப்படுத்தின, தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீனா முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதற்குபிறகு விட்டுக்கொடுக்காத பாகிஸ்தான் அணி ஒரு கால் அடிக்க போட்டியானது கடைசிவரை விறுவிறுப்பாக சென்று சமனில் முடிந்து, வெற்றியானது ஷூட் அவுட் முறைக்கு சென்றது.

ஷூட் அவுட் முறையில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2-0 என வெற்றிபெற்ற சீனா முதல்முறையாக ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிரோபியின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணியை எதிர்கொள்கிறது சீனா. சொந்த மக்களுக்கு முன்னிலையில் வெற்றியை பெறவேண்டும் என தீவிர முயற்சியுடன் களமிறங்கும் சீனாவை எதிர்த்து இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா ஹாக்கி அணி
”என் அனைத்து நட்சத்திரங்களும் நீ தான்” - நடிகர் சித்தார்த்-அதிதி ராவ் இருவருக்கும் டும்..டும்..டும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com