மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் ஜப்பானில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணியும், இரண்டாவது பாதியில் சீனாவும் தலா ஒரு கோல் அடித்தன. ஆட்டத்தின் இறுதியில் ஸ்கோர் 1-1 என சமநிலை பெற்றது.
இதனால் போட்டி, பெனால்டி ஷூட் அவுட் வரை நீடித்தது. இறுதியில், 5-4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன்பாக 2004-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஹாக்கி கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் 2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாட இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.