இந்தியா - ஆஸி. தொடர்: ஐஐசி-யின் புதிய விதிகள் பொருந்துமா?

இந்தியா - ஆஸி. தொடர்: ஐஐசி-யின் புதிய விதிகள் பொருந்துமா?
இந்தியா - ஆஸி. தொடர்: ஐஐசி-யின் புதிய விதிகள் பொருந்துமா?
Published on

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கு ஐஐசியின் புதிய விதிமுறைகள் பொருந்தாது என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையி‌லான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில்‌ வரும் 17 ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இரு அணிகள் இடையிலான போட்டிகளின் தேதி இறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி முதல் போட்டி வரும் 17 ஆம் தேதி சேப்பாக்கத்தில் ‌நடைபெறவுள்ளது. ‌இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி, 5 ‌ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிக‌ள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

சென்னையில் இந்தியா-ஆஸி. ஒருநாள் போட்டி ஆஸ்திரேலிய அணி வருகிற 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு பிரிவாக சென்னையை வந்தடைகிறார்கள். ஒரு நாள் தொடருக்கு முன்பாக பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி புதிய விதிமுறைகள் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் இந்த விதிமுறைகள் இந்தியா - ஆஸ்திரேலியா தொடருக்கு பொருந்தாது. ஏனெனில் இந்தப் போட்டி தொடரின் இடையில் அந்த விதிகளை கொண்டு வர முடியும். அதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு ஏற்கனவே உள்ள விதிகளின் படியே இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிகளை நடத்த ஐ.சி.சி. அனுமதித்து இருக்கிறது.

பேட்டுகளின் அளவுகளில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள், களத்தில் வன்முறை நோக்குடன் மிக மோசமாக நடந்து கொள்ளும் வீரரை வெளியேற்றுவது, டெஸ்ட் இன்னிங்சில் 80 ஓவர்களுக்கு பிறகு கூடுதலாக டி.ஆர்.எஸ். வாய்ப்பு வழங்கும் முறையை ரத்து செய்வது, ரன் எடுக்க ஓடுகையில், கிரீசுக்குள் நுழைந்தாலும்கூட ஸ்டம்பு தாக்கப்படும் சமயத்தில் வீரரின் பேட்டோ அல்லது கால்களோ அந்தரத்தில் இருந்தால் ரன்-அவுட் வழங்கும் முந்தைய முறையை தளர்த்தி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவது உள்ளிட்டவை புதிய விதிகளில் இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கும் வங்காளதேசம் - தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் - இலங்கை ஆகிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் இருந்து இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com