பந்துவீச்சு ஓகே, ஆனால்... தோல்விக்கு கோலி விளக்கம்!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 4-வது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நேற்று தோற்றது.
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய இந்திய அணி 49 புள்ளி 4 ஓவர்களின் முடிவில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 60 ரன்களும், தோனி 54 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி கூறும்போது, ’நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். 189 ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீஸை கட்டுப்படுத்திவிட்டோம். இக்கட்டான சூழ்நிலையில் முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதோடு வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சும் பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது’ என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறும்போது, ‘இந்திய அணியை வெல்ல முடியும் என்று நம்பினோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது’ என்றார்.