IND Vs BAN | வங்கதேசத்தை வெளுத்து வாங்கிய ரிஷப், கில்.. அடுத்தடுத்து சதம் விளாசல் - இந்தியா அபாரம்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சதம் அடித்தனர்.
ரிஷப் பண்ட், சுப்மன் கில்
ரிஷப் பண்ட், சுப்மன் கில்எக்ஸ் தளம்
Published on

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வினின் தரமான சதம் மற்றும் ஜடேஜாவின் 86 ரன்கள் ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸ் முடிவில் 376 ரன்களை குவித்தது.

அதனைத்தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 149 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர், 227 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இரண்டாவது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இன்று, 3வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணியில், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் விக்கெட்டை விடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி விளையாடினர்.

இதையும் படிக்க: ‘திருப்பதி லட்டு’ தயாரிப்பில் இவ்வளவு சுவாரஸ்ய தகவல்கள் இருக்கா? | 300 ஆண்டு வரலாறும்.. பின்னணியும்!

ரிஷப் பண்ட், சுப்மன் கில்
’அது அவுட்டே இல்ல..’ ரிவ்யூ கேட்காமல் வெளியேறிய விராட் கோலி.. முகம் சுளித்த ரோகித் சர்மா!

மேலும், அவர்கள் அரைசதம் அடித்ததுடன், ஓரளவுக்கு ரன்ரேட்டையும் உயர்த்தினர். தொடர்ந்து விளையாடிய இருவரும் சதம் அடித்தனர். ரிஷப் பண்ட் 638 நாட்கள் கழித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து அசத்திய நிலையில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவர் 128 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம், இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிக டெஸ்ட் சதம் அடித்த பட்டியலில் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனியின் சாதனையை சமன் செய்தார். இருவரும் தலா 6 சதங்கள் அடித்துள்ளனர். இதில் ரிஷப் பண்ட் 58 இன்னிங்ஸ்களிலும், தோனி 144 இன்னிங்ஸ்களிலும் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில்லும் சதம் அடித்தார். அவர், 162 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். தற்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்துள்ளது. மேலும் 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது சுபமன் கில் 119 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதையும் படிக்க: மணிப்பூர் | ஷாக் கொடுத்த ட்ரோன் - ராக்கெட் தாக்குதல்.. காரணம் யார்? உளவுத்துறை வெளியிட்ட அறிக்கை!

ரிஷப் பண்ட், சுப்மன் கில்
'தோனியைவிட சிறந்தவர் ரிஷப் பண்ட்; விளையாட்டுத்தனமாக எண்ணிவிடவேண்டாம்'- எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com