முத்தரப்பு டி20 கிரிக்கெட் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றுள்ளது.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் இடையேயான டி 20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா
ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியாவும் பங்களாதேஷ் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டி, இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது. இந்திய அணியில் முகமது சிராஜ்க்கு பதிலாக ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் இந்திய அணியின் வெற்றி பிரகாசமடைந்துள்ளது.
அணி விவரம்:
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), தவான், சுரேஷ் ரெய்னா, ராகுல், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனட்கட், யுஸ்வேந்திர சாஹல்.
பங்களாதேஷ்:
ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), தமிம் இக்பால், லிட்டன் தாஸ், சபிர் ரகுமான், முஷ்பிஹுர் ரஹிம், சவும்யா சர்கார், மக்முதுல்லா, மெஹிடி ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான், ருபெல் ஹூசைன், நஸ்முல் இஸ்லாம்.