நியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' !

நியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' !
நியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' !
Published on

உலகக் கோப்பை போட்டியின் மிக முக்கியமான வாழ்வா சாவா போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி. எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்காது. ஆனால், இன்றையப் போட்டியில் நியூசிலாந்து வெற்றிப் பெற்றால் அரையிறுதிக்கு சென்றுவிடும். ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி நேற்றையப் போட்டியில் இங்கிலாந்தை வென்றது மூலம் முதல் அணியாக உலகக் கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்தது.

இப்போது புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும் இருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. எனவே இன்றைய பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் வெற்றிப் பெற்றால் 13 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு சென்று, அரையிறுதிக்கும் முன்னேறிவிடும். ஆனால் பாகிஸ்தான் புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்தில் இருக்கிறது. எனவே இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால்தான் உலகக் கோப்பை தொடரில் நீடிக்கும் சூழ்நிலை இருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு கேப்டன் வில்லியம்சனும், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும் பேட்டிங்கில் அசத்தி வருகிறார்கள். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் கூட தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக்-அவுட் ஆன போதிலும் வில்லியம்சனும், டெய்லரும் இணைந்து 300 ரன்களை நெருங்க வைத்தனர். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட்,பெர்குசன், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே சுமார்தான். பேட்டிங்கை பொறுத்தவரை இங்கிலாந்துக்கு எதிரான கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஹாரிஸ் சொஹைல், பாபர் அசாம் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அதேபோல பவுலிங்கில் முகமது ஆமிர், ஷதாப், வகாப் ரியாஸ் சிறப்பாகவே பந்து வீசுகின்றனர். இதுவரை உலகக் கோப்பைகளில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் 8 முறை மோதியுள்ளனர். அதில் பாகிஸ்தான் 6 முறையும், நியூசிலாந்து 2 முறையும் வெற்றிப் பெற்றுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com