தொடர் சொதப்பல்.. இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் இகோர் ஸ்டிமாக்!

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து இகோர் ஸ்டிமாக்கை நீக்கியிருக்கிறது அகில இந்திய கால்பந்து ஃபெடரேஷன். உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் சந்தித்த படுதோல்வியை அடுத்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
igor stimac
igor stimacpt web
Published on

இகோர் ஸ்டிமாக்

இகோர் ஸ்டிமாக் - குரேயேஷிய நாட்டைச் சேர்ந்த இவர், கடந்த 2019ம் ஆண்டு இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஸ்டீஃபன் கான்ஸ்டன்டைன் தலைமையில் இந்திய அணி பெரிய முன்னேற்றங்கள் காணாததால், ஸ்டிமாக்கை அந்த இடத்துக்கு தேர்வு செய்தது இந்திய கால்பந்து ஃபெடரேஷன். கத்தார், ஈரான் போன்ற ஆசிய நாடுகளிலுள்ள கிளப்களுக்கு மேனேஜராய் இருந்திருந்த அவர், 2012-13 காலகட்டத்தில் குரேயேஷிய தேசிய அணிக்கே பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். அதனால் இந்திய ரசிகர்களுக்கு இவர் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த 5 ஆண்டுகள் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டிருக்கும் ஸ்டிமாக் எதிர்பார்த்த மாற்றத்தையோ முன்னேற்றத்தையோ எற்படுத்தினாரா என்றால் இல்லை. இந்திய அணி ஃபிஃபா தரவரிசையில் பின்னால் தான் சென்றிருக்கிறது. ஆட்ட முறையிலும், அணுகுமுறையிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பெரிய தொடர்களிலும், பெரிய அணிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து தடுமாறியிருக்கிறது.

igor stimac
’என் பயிற்சியாளர் வாழ்க்கையில் இப்படிஒரு மோசமான அணியை பார்த்ததில்லை..’ PAK-ஐ விளாசிய கேரி கிர்ஸ்டன்!

தொடர்ந்து சொதப்பிய இந்திய அணி

2023ல் மட்டும் இந்தியா சிலபல வெற்றிகளைப் பதிவு செய்தது. இன்டர்கான்டினன்டல் கோப்பை, SAFF சாம்பியன்ஷிப் போன்றவற்றை அந்த ஆண்டு இந்திய அணி வென்றது. ஆனால், அவை எல்லாம் பெரும்பாலும் தரவரிசையில் இந்தியாவுக்குக் கீழே இருக்கும் அணிகளோடு ஆடிய தொடர்கள். அதுவே ஆசியன் கப் போன்ற மிகப் பெரிய தொடரில் ஆடும்போது இந்திய அணி பெரிய அளவில் சொதப்பியது. ஆசியன் கப்பில் ஆடிய 3 போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல், ஒரு வெற்றி கூடப் பெற முடியாமல் வெளியேறியது. அதற்கடுத்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றிலும் இப்போது படுதோல்வி அடைந்தது. அதுவே இப்போது அவர் பதவி பறிபோகக் காரணமாக அமைந்தது.

2026 உலகக் கோப்பைக்கான ஆசிய தகுதிச் சுற்று நடந்துவருகிறது. அதன் இரண்டாவது சுற்றில் இந்திய அணி கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளோடு ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதனால் இந்தியா எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று கருதப்பட்டது. ஆனால், மூன்றாவது இடமே பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருக்கிறது இந்தியா. வழக்கமாக 36 அணிகளுடன் நடக்கும் உலகக் கோப்பை தொடரில், 2026 முதல் 48 அணிகள் பங்கேற்கப்போகின்றன. அதனால் ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் அதிக அணிகள் இத்தொடருக்கு தகுதி பெறும். ஆசியாவிலிருந்து 8-9 அணிகள் வரை அந்தத் தொடரில் பங்கேற்க வாய்ப்பிருக்கிறது. அதனால் அதிக எதிர்பார்ப்போடு இருந்த இந்திய ரசிகர்களுக்கு இந்த தொடர் சொதப்பல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தின.

igor stimac
யூரோ 2024: வெற்றியோடு தொடங்கியிருக்கும் இங்கிலாந்து.. ஆனால் அப்பட்டமாய்த் தெரியும் பிரச்னைகள்!

ஸ்டிமாக்கின் கீழ் இந்திய அணி எந்த வகையிலும் கொஞ்சம் கூட முன்னேறவில்லை என்பதால், பலரும் அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், சமீபத்தில் தான் அந்தப் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என ஸ்டிமாக் இந்திய வீரர்களிடம் கூறியதாக செய்திகள் வெளிவந்தன. அவரது ஒப்பந்தம் 2026 வரை இருப்பதால், அதை உடைப்பது கடினம் என்று நிர்வாகம் குழம்பியிருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்நிலையில் இப்போது ஸ்டிமாக்கை பதவியில் இருந்து நீக்கியிருப்பதாக இந்திய கால்பந்து ஃபெடரேஷன் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

igor stimac
8 பவுலர்கள் வைத்து தோற்ற இந்தியா; 86ரன்னில் சுருண்ட ஆஸி! டி20 WC-ல் IND-AUS மோதிய சிறந்த 5போட்டிகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com