ஹர்திக் பாண்ட்யாவை தன்னுடன் ஒப்பிட வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற ஆட்ட உத்தியை பின்பிற்றி விக்கெட்டுகளை இழக்கும் பட்சத்தில் பாண்ட்யாவை தம்முடன் ஒப்பிட வேண்டாம் என முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார். பாண்ட்யாவிடம் நிச்சயம் திறமை இருப்பதாகவும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அதனை காண முடிந்ததாகவும் கபில்தேவ் கூறினார். ஆனால் ஒவ்வொரு போட்டிக்கும் பாண்ட்யா உளரீதியாக தயாராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாண்ட்யா மோசமாக விக்கெட்டை இழந்ததாகவும் கபில்தேவ் சாடினார்.
முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் கூட்டணி சிறப்பாக விளையாடியது. இந்தப்போட்டியில் ஹர்திக் பாண்டா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தினார்.அவரது இன்னிங்ஸை முன்னணி வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டினர். சிலர் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆலன் டொனால்ட் பந்துவீச்சை விளாசி 129 ரன்கள் குவித்த கபில்தேவை ஞாபகப்படுத்திவிட்டார் என தெரிவித்திருந்தனர்.