தனது தாயின் அக்கறை மிகுந்த கவலையை பகிர்ந்த விராட் கோலி

தனது தாயின் அக்கறை மிகுந்த கவலையை பகிர்ந்த விராட் கோலி
தனது தாயின் அக்கறை மிகுந்த கவலையை பகிர்ந்த விராட் கோலி
Published on

கொரோனா அச்சுறுத்தலினால் இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச போட்டிகளில் விளையாடாத சூழலில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் மயங் அக்ராவாலோடு கேப்டன் விராட் கோலி வீடியோ மூலமாக சேட் செய்துள்ளார். அதில் அவர் டயட் விஷயத்தில் தனது தாயை சமாதானப்படுத்துவது ஆரம்ப நாட்களில் தனக்கு கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மிஷினாக இயங்கி வருபவர் கோலி. அதற்கு காரணம் உடலை எப்போதுமே அவர் ஃபிட்டாக வைத்துக் கொள்வது தான். சாப்பாட்டு விஷயத்தில் மிக கட்டுப்பாட்டோடு ‘டயட்’ எடுத்து கொள்பவர். அதே நேரத்தில் நாள் தவறாமல் உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக பயிற்சிகளையும் செய்வார்.

மயங் அகர்வாலுடனான கலந்துரையாடலில் கோலி தெரிவித்துள்ளதாவது“அம்மாவை பொருத்தவரை குழந்தைகள் புஷ்டியாக இருக்க வேண்டும். ஒட்டிப்போன கன்னங்களோடும், மெலிந்த தேகத்தோடும் காணப்பட்டால் அந்த குழந்தையின் உடல்நலனில் ஏதோ கோளாறு இருக்கிறது என எண்ணுவார். களத்தில் துடிப்போடு விளையாடுவதற்காக நான் சாப்பாட்டு விஷயத்தில் கட்டுப்பாடுகளை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடித்து வருகிறேன். அதற்கான பலன் அடுத்த சில நாட்களிலேயே தென்பட்டன. அதை பார்த்த என் அம்மாவோ எனக்கு உடல் நிலை சரியில்லை என சொல்ல ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் நான் நன்றாக தான் இருக்கிறேன். விளையாடுவதற்காக இதை செய்கிறேன் என அம்மாவுக்கு புரிய வைப்பேன். இருந்தாலும் அவரை சமாளிக்கவே முடியாது. அனைத்தையும் கேட்டு விட்டு மறுநாள் காலை எழுந்ததும் ‘உனக்கு உடம்பு சரியில்லையா?’ என கேட்பார். எல்லா அம்மாக்களும் அப்படி தான். தங்கள் பிள்ளைகள் மெல்லிய தேகத்தோடு காணப்பட்டால் உடம்பு சரியில்லை என எண்ணுவார்கள்” என்றார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com