உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகையை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இதில் லீக் சுற்று முடிந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையி றுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதிய இந்திய அணியும், இரண்டாம் அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதிய ஆஸ் திரேலிய அணியும் தோல்வி அடைந்தன.
இதையடுத்து இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இந்தப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. உலக கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்ற தில்லை என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பையின் மொத்த பரிசுத் தொகையாக, 68 கோடி ரூபாயை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து 27 கோடியே 42 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங் கப்படுகிறது. இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 13 கோடியே 71 லட்சம் ரூபாய் அளிக்கப்படுகிறது.
அரையிறுதியில் தோல்வி அடைந்த அணிகளுக்கு தலா 5.4 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கொடுக்கப்படவுள்ளது. முதல் சுற்றுடன் வெளியேறிய அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா 68 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.