சர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் ரெஃப்ரியாக, இந்தியாவை சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்தவர் ஜி.எஸ்.லட்சுமி. 51 வயதான இவர், முதல் தர மகளிர் கிரிக்கெட் போட்டியில் 2008-09 இல் நடுவராக பணியாற்றியவர். இதுவரை மூன்று மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், மூன்று மகளிருக்கான டி-20 போட்டிகளிலும் நடுவராக பணியாற்றியுள்ளார். தற்போது, அவரை சர்வதேச அளவில் ஆண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியின் நடுவர் குழுவில் ஒருவராக ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஜி.எஸ்.லட்சுமி, ‘ஐசிசியின் இந்த அறிவிப்பு தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், பெருமையளிப்பதாகவும் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துவேன் என்றும் கூறியிருக்கிறார். லட்சுமி. ‘ஜி.எஸ்.லட்சுமி பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்’ என்று ஐசிசியின் நடுவர் குழுவில் அங்கம் வகிக்கும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.