சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய விதிமுறைகள் வரும் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.
புதிய விதியின்படி, ஒழுங்கீனமான நடக்கும் வீரர்களை போட்டிக் களத்தில் இருந்து வெளியேற்ற நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும், நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் முறை பயன்படுத்தப்பட உள்ளது. புதிய விதியின்படி, டெஸ்ட் போட்டிகளில், ஒரு இன்னிங்சில் 80 ஓவர்களுக்கு பிறகு டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்த முடியாது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய விதிமுறைகள் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடருக்கு பொருந்தாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.