டி20 உலகக் கோப்பை: வெற்றிக்கு மல்லுக்கட்டும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து... இன்று பலப்பரீட்சை

டி20 உலகக் கோப்பை: வெற்றிக்கு மல்லுக்கட்டும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து... இன்று பலப்பரீட்சை
டி20 உலகக் கோப்பை: வெற்றிக்கு மல்லுக்கட்டும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து... இன்று பலப்பரீட்சை
Published on

நடப்பு டி20 உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியா இன்று இங்கிலாந்து அணியை சூப்பர் 12 சுற்றில் எதிர்கொள்கிறது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று சூப்பர் 12 சுற்றில் (வெள்ளிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்துடன் மோதுகின்றது. தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள இந்த இரு அணிகளுக்கும் இன்றைய ஆட்டத்தின் வெற்றி மிகவும் முக்கியமானது. வெற்றிக்காக இரு அணிகளும் தீவிரம் காட்டுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதனிடையே ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், அவர் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரரும் விளையாடலாம் எனச் சொல்லி ஐசிசி விதிகளை தளர்த்தியுள்ளது. உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் அடங்கிய ஆஸ்திரேலிய அணியில் வேட் மட்டுமே ஒரே ஒரு விக்கெட் கீப்பர். மாற்று விக்கெட் கீப்பர் அந்த அணியில் இல்லை. அதனால் வேட் இன்றைய போட்டியில் விளையாட முடியாமல் போனால், டேவிட் வார்னர் அல்லது ஸ்டார்க் ஆகிய இருவரில் ஒருவர் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார்கள் எனத் தெரிகிறது.

ஏற்கனவே கொரோனா பாதிப்பால் முதல் போட்டியில் ஆடாத சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, களம் திரும்புவதற்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மெல்போர்னில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:-

இங்கிலாந்து: 1 ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 2 அலெக்ஸ் ஹேல்ஸ் / பில் சால்ட், 3 டேவிட் மலான், 4 பென் ஸ்டோக்ஸ், 5 லியாம் லிவிங்ஸ்டோன், 6 ஹாரி புரூக், 7 மொயீன் அலி, 8 சாம் குரான், 9 கிறிஸ் வோக்ஸ், 10 அடில் ரஷித், 11 மார்க் வூட்.

ஆஸ்திரேலியா: 1 ஆரோன் பின்ச் (கேப்டன்), 2 டேவிட் வார்னர், 3 மிட்செல் மார்ஷ், 4 கிளென் மேக்ஸ்வெல், 5 மார்கஸ் ஸ்டோனிஸ், 6 டிம் டேவிட், 7 மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), 8 மிட்செல் ஸ்டார்க், 9 பாட் கம்மின்ஸ், 10 ஆடம் ஜம்பா , 11 ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிக்கலாமே: டி20 உலகக் கோப்பை: ரூசோ, நார்ட்ஜேவின் அசத்தலான ஆட்டத்தால் வங்கதேசம் படுதோல்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com