டி20 போட்டிகளிலும் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையை அமல்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஐசிசி தொழில்நுட்பக் குழுவின் வருடாந்திர கூட்டம் லண்டனில் அனில் கும்ப்ளே தலைமையில் நடந்தது. இதில், டி20 போட்டிகளிலும் டிஆர்எஸ் முறையை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அதேபோல, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளைச் சேர்ப்பது, களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றும் அதிகாரத்தினை நடுவருக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் ராகுல் டிராவிட், மஹேலா ஜெயவர்த்தனா, டேரென் லீமென், ஷான் பொல்லாக் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டனர்.