‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..!

‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..!
‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..!
Published on

நடந்த முடிந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர், விறுவிறுப்பிற்கு மட்டுமின்றி, சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் முடிந்தது. குறிப்பாக மழையால் ரத்தான போட்டிகள், அரையிறுதியில் தோனி தாமதமாக களமிறக்கப்பட்டது, மற்றொரு அரையிறுதியில் அலெக்ஸ் கரே தலையில் அடிபட்டு ஆட முடியாமல் போனது உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கெல்லாம் மேலாக இறுதிப் போட்டியின் முடிவில் சர்ச்சைகளும், விமர்சனங்களும் பல நாட்கள் சமூக வலைத்தளங்களில் மலைபோல் குவிந்தன.

ஏனென்றால் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது யார் என்ற வாதம் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் ஓயவில்லை. குறிப்பாக இறுதிப் போட்டியில் இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து பட்டு பவுண்டரிக்கு சென்ற விவகாரம் பேசுபொருளானது. இதற்கும் மேலாக சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அடித்த 15 ரன்களை, நியூசிலாந்து அடித்த போதிலும், இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் ஐசிசி-யின் கிரிக்கெட் விதிமுறையாகும். இந்த விதிப்படி, ஐசிசி தொடர்களின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சூப்பர் ஓவர்கள் சமனில் முடிந்தால், அதிக பவுண்டரிகளை விளாசிய அணியே வெற்றி பெற்றதாகும். இந்த விதியினால் தான் அன்று இங்கிலாந்து கோப்பை பெற்றது. ரசிகர்களின் மனதை வென்றிருந்தாலும் நியூஸிலாந்து கோப்பையை இழந்தது. 

இதனால் ரசிகர்கள் முதல் வல்லுநர்கள் வரையிலும் பலரும் இந்த விதிமுறைக்கு எதிராக விமர்சனக் கணைகளைத் தொடுத்தாங்க. சர்ச்சைக்குரிய விதியை மாற்றம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினாங்க. இந்த நிலையில துபாயில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சர்ச்சைக்குரிய பவுண்டரி விதிமுறையை ஐசிசி நீக்கியிருக்காங்க. 

இனிமேல் ஐசிசி தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளின் சூப்பர் ஓவர்கள் டையில் முடிந்தால், பவுண்‌டரிகளின் அடிப்படையில் போட்டியின் முடிவு எட்டப்படாது. ஒரு அணி, மற்றொரு அணியை விட அதிகமாக ரன்கள் சேர்க்கும் வரை, சூப்பர் ஓவர்கள் வீசப்படும் என புதிய முறை அறிமுகப்படுத்திருக்காங்க. 

ஐசிசியின் இந்த புதிய விதிமுறைக்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வராங்க.. உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பே இந்த விதியை நீக்கியிருந்தா..? போராடி தோல்வியடைந்த நியூஸிலாந்து அணி இன்று நடப்பு சாம்பியனா! இருந்திருக்கலாம். நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் சொல்லனும்னா.. இந்த விதிய இப்ப நீக்குனதுக்கு நியூசிலாந்து தான் ‘வட போச்சே’ என்ற பாணியில் உலகக் கோப்பை போச்சே என்று புலம்புவாங்க...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com