’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை!

’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை!
’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை!
Published on

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள கைகடிகாரத்தை அணிய, கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 

கிரிக்கெட் வீரர்கள் மைதானத்துக்குள் செல்போன், வாக்கி டாக்கி உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போட்டியி லும் இந்த முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இன்னிங்கிஸில் இங்கிலாந்து அணி 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, முமகது அப்பாஸ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கைகளில் ஆப்பிள் வாட்ச்-சை கட்டியிருந்தனர். இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் அதை அணியை, பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதித்தனர். ஆப்பிள் வாட்ச் மூலம் தகவல்களை அனுப்பவும் பெறவும் முடியும் என்பதால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

(ஹசன் அலி)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி, இதை உறுதிப்படுத்தினார். ‘ஊழல் தடுப்பு அதிகாரிகள் வாட்ச் அணியக் கூடாது என்று கூறினர். இதனால் இனி மைதானத்துக்குள் அணிய மாட்டோம்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com