உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் கலந்து கொள்ள இந்திய வீராங்கனை சித்ராவை அனுமதிக்குமாறு இந்திய தடகள சம்மேளனம் விடுத்த கோரிக்கையை, சர்வதேச தடகள சம்மேளனம் நிராகரித்தது.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற போதும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியில் சித்ராவை , இந்திய தடகள சம்மேளனம் தேர்ந்தெடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கில் சித்ராவை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் தீர்பளித்தது. இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துமாறு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் இந்திய தடகள சம்மேளனத்திற்கு அறிவுறுத்தினார். அதன்பேரில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க சித்ராவுக்கு அனுமதி வழங்குமாறு இந்திய தடகள சம்மேளனம், சர்வதேச தடகள சம்மேளனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.