'நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன கேப்டன்' - பவுலர்களை எச்சரித்த ஷிகர் தவான்

'நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன கேப்டன்' - பவுலர்களை எச்சரித்த ஷிகர் தவான்
'நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன கேப்டன்' - பவுலர்களை எச்சரித்த ஷிகர் தவான்
Published on

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டனாக எப்படி செயல்படப்போகிறேன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார் ஷிகர் தவான்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கேப்டனாக எப்படி செயல்படப்போகிறேன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார் ஷிகர் தவான்.

பேட்டி ஒன்றில் அவர், ''கேப்டனாக பொறுப்பேற்கும் போது உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. நீங்கள் உங்கள் அணிக்காக யோசிக்க வேண்டும். அணியில் உள்ள சூழலை நல்ல விதமாக வைத்திருக்க வேண்டும். எனக்கு கேப்டன் பொறுப்பு அவ்வப்போது கிடைக்கிறது. மகிழ்ச்சி தான். எனக்கு தற்போது அதிக நம்பிக்கை வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு பவுலர் அதிகமாக ரன் கொடுத்தால் கூட அவர் என்ன நினைப்பாரோ என்று அவருக்கான ஓவரை கொடுத்து விடுவேன். ஆனால் இப்போது அந்த தவறை நான் செய்வதில்லை. நான் ரன்களை அதிகம் கொடுக்கும் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் அவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்பதை எல்லாம் இப்போது யோசிக்க மாட்டேன். அணியில் நல்லதுக்காகவே கேப்டன்கள் முடிவெடுக்க வேண்டும். இனிவரும் தொடர்களில் கேப்டனாக நான் கடுமையான முடிவை எடுப்பேன்.

டி20, ஒருநாள் கிரிக்கெட் எந்த போட்டியாக இருந்தாலும் சரி சூழலுக்கு தகுந்தார் மாதிரி தான் விளையாட வேண்டும். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால், அங்கு போய் அதிரடியாக ஆடி ஆட்டம் இழப்பதில் எந்த பயனும் இல்லை. பேட்டிங்கில் என்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை நான் அதிகப்படுத்த வேண்டும் என நான் கடுமையாக உழைத்து இருக்கிறேன்'' என்றார்.

தவற விடாதீர்: வங்கதேச தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா - இதுதான் காரணமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com