“இந்திய அணியின் ஃபிட்னெஸ் சிஸ்டத்தையே மாற்றியவர் விராட் கோலி!” என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா பாராட்டியுள்ளார்.
“இந்திய கிரிக்கெட் அணியின் ஃபிட்னெஸ் சிஸ்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியவர் கேப்டன் கோலி தான். அதற்கு முன்னர் அணிக்குள் வீரர்களின் உடலில் உள்ள கொழுப்பு சதவிகிதம் குறித்து யாருமே பேசியது கிடையாது. ஆனால் முதலில் அந்த சோதனையை தனக்கு தானே செய்து கொண்டு அணியின் சக வீரர்களையும் செய்ய வைத்தவர் கோலி” என இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் “அணி வீரர்களின் ஃபிட்னெஸ் தரத்தை முற்றிலுமாக அது மாற்றியது. நன்றாக சாப்பிட்டால், களத்தில் திடமுடன் விளையாட முடியும். உடற்தகுதியை பராமரித்தால் எனர்ஜியுடன் இருக்கலாம்” என சொல்லியுள்ளார்.
அவரது உணவு பழக்கத்தை கோலி மாற்றி உள்ளாரா? என்ற கேள்விக்கு இதனை தெரிவித்துள்ளார் இஷாந்த்.
அணியின் கேப்டனே இந்த ஃபிட்னெஸ் விஷயத்தில் முன்னின்று வழிநடத்துவது தான் இன்று இந்தியாவை சர்வதேச கிரிக்கெட் விளையாடும் அணிகள் உடற்தகுதி விஷயத்தில் உன்னிப்பாக கவனித்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.