''இருநாட்டு உறவுகளை சிக்கலாக்கும் வகையிலான கருத்துக்களை இருநாட்டு வீரர்களும் சொல்லக் கூடாது; சேவாக் இப்படிப்பட்ட கருத்துக்களை கூறுவதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று அக்தர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் குறித்து பேசியது விவாதப்பொருளாக மாறியது. அக்தர் ஓடி வந்து முழங்கையை மடக்கி த்ரோ எறிவார் என்றும் இல்லையென்றால் ஐசிசி அவரை ஏன் தடை செய்ய வேண்டும் என்று சேவாக் கூறியிருந்தார்.
இந்நிலையில் சேவாக்கின் விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ள ஷோயப் அக்தர், “இப்படிப்பட்ட கருத்துகளை சேவாக் கூற வேண்டாம் என்று நான் கெஞ்சி கேட்கிறேன், சேவாகுக்கு ஐசிசியை விட அதிகம் தெரிந்தால் கருத்து கூற அவருக்கு தகுதி உண்டு. ஆனால் சேவாகுக்கான என்னுடைய பதில் கொஞ்சம் வித்தியாசமானது. அதாவது கவனமாகவே நான் என் கருத்துக்களைக் கூறும் வயதில் இருக்கிறேன்.
இருநாட்டு உறவுகளை சிக்கலாக்கும் வகையிலான கருத்துக்களை இருநாட்டு வீரர்களும் சொல்லக் கூடாது, கவனமாக கருத்து கூற வேண்டும். சேவாக் இப்படிப்பட்ட கருத்துக்களை கூறுவதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று அக்தர் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாம்: ”நிச்சயமாக அடுத்த சீசனில் விளையாடுவேன்”-சென்னை ஃபேன்ஸ்க்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி