"நான் ஒரு இந்தியனும் கூட" - டென்னிஸ் வீரர் சமீர் பானர்ஜி

"நான் ஒரு இந்தியனும் கூட" - டென்னிஸ் வீரர் சமீர் பானர்ஜி
"நான் ஒரு இந்தியனும் கூட" - டென்னிஸ் வீரர் சமீர் பானர்ஜி
Published on

அமெரிக்காவை சேர்ந்தவன் என்றாலும் நான் ஒரு இந்தியனும் கூட என விம்பிள்டன் ஜூனியர் கோப்பையை வென்ற சமீர் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ஆடவருக்கான ஜூனியர் பிரிவில் அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பானர்ஜி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் லிலோவை எதிர்த்து சமீர் களமிறங்கினார். ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் சமீர் பானர்ஜி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றினார்.

இது குறித்து "இந்தியா டுடே"வுக்கு பேசிய சமீர் பானர்ஜி "இந்தியாவில் இருக்கும் அனைவரும் என் வெற்றியை கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. விம்பிள்டன் தொடர் முழுவதும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்தியாவுடன் என் வாழ்க்கை எப்போதும் இணைந்தே இருந்திருக்கிறது. என் பெற்றோர்கள் இந்தியர்கள். பல முறை நான் இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். அங்கிருக்கும் ஆர்.கே கண்ணா டென்னிஸ் மைதானத்தில் விளையாடி இருக்கிறேன். நான் அமெரிக்காவை பிரதிநித்துவம் செய்தாலும் நான் ஒரு இந்தியனும் கூட" என்றார்.

மேலும் பேசிய அவர் "நான் 5 வயதில் இருந்து டென்னிஸ் விளையாடி வருகிறேன். ஒவ்வொரு வார இறுதியிலும் அப்பாவுடன் விளையாடுவேன். பின்பு, பேஸ்பால் மற்றும் கால்பந்தும் விளையாடி இருக்கிறேன். ஆனால் என்னை டென்னிஸ்தான் ஈர்த்தது. ஒருவருடைய தனிப்பட்ட திறன் அதில் வெளிப்படும். வெற்றியோ தோல்வியோ டென்னிஸில் என்னை மட்டுமே சேரும் என்பதால் அந்தச் சவால் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்றார் சமீர் பானர்ஜி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com